In honour of Tamil Heritage Month in January, we had the privilege of speaking to a few individuals in the Tamil community on what Tamil identity means to them. Another area of focus this year was reflections through storytelling. We were able to dive deeper into some of the lives of these individuals through conversations and learn more about their life growing; which included memories of their culture, struggles, traditions, and achievements
Here is the story of Sivaram Sivajeyanathan:
“My early childhood memories consist of the days that I spent living with my parents back home, my school days, fooling around with friends, and playing a lot of cricket. I remember celebrating Thai Pongal and New Year with fireworks, and flying kites around the neighborhood. One of the most important things I learned, that I still carry today is showing kindness towards the animals and pets around me. As a child, I would have pet fish, cats, dogs, birds, and more that would bring me so much joy.
My school life can be split into two periods: pre-1983, and post-1983. Before the riots, I was a brilliant student. I was an all-rounder and top scorer in academics and in sports. However, after 1983, I was forced to move back to Jaffna because Colombo was not safe for Tamils. I was only 9 when I had to live away from my parents to stay with my aunt. Being away from my Amma and Appa was so hard for me. I would always cry for my mother and wish to be close to her. It slowly started to impact my studies. The period where I was kept away from family was dark, and I was only able to experience the joy of school life after being reunited with family.
My parents raised us in a way that we would be taken aside even when a chicken would be slaughtered for celebration or festival. They tried to protect us from ever having to experience that kind of pain. I was then only nine years old when the 1983 riots took place. I had an exam day at the Bambalapitiya Colombo Hindu School. I woke up early to finish preparing for my exams and was getting ready to go to school. I never would have been able to anticipate the atrocities that I witnessed that day. I would have never known that this day would leave behind a never-ending nightmare from which I can not awake for decades to come. I had to witness Tamil people slaughtered and burned before me. I couldn’t understand what was happening or why it was happening to us. I just knew that my world was being turned upside down. There is nothing my parents could have done to protect me from the things I’ve had to see and the impact that it has on me to this day. You can read more about my experiences on that day in my Tamil writings.
The ways that my family came together in celebration looked different after the riots. In the good days, we would travel from Colombo to Jaffna for the holidays. I would travel by train patiently waiting to see my family, friends, neighbors, and villagers. My family and friends in the village also anticipate my return for the holidays. Those times before 1983 were “sorkkam” (heaven).
Holidays after 1983 were like “thavam” which loosely translates to a period of yearning or longing. Amma and Appa had to stay in Colombo to work, and my sister and I were in Jaffna, though not together. In those days we didn’t have a telephone or anything. Letters were the only way to stay connected. Holidays were the only times that I could see my mother. I would count the days till I could finally see her. We didn’t celebrate with fireworks or festivities like we used to but, nor could it be compared to the feeling of being able to see my mother again after months of missing her.
In 1987, after 5 crucial years of my childhood spent alone, I was finally reunited with my family. Those were such special days. I remember these days as the best celebrations of my entire lifetime. We always found celebration in moments we spent together.
After a few years, my sister had moved to Canada and managed to sponsor my parents as well. While I was still back home, I was a sales representative at Maharajas. I would have to travel to places like Mattakalappu at this time. This is when I witnessed the attack on the Eravur police station. As I was on my way to work, the Sri Lankan army stopped us to take our vehicle to try to prevent the attack. To deny their request would have been a deathwish. So, my colleagues and I had to cooperate. We drove in the front seat along with 4 other vehicles that were stopped in a similar way, and we drove towards the police station with the army sitting in the backseats of our vehicles. At the station, we had to see the fight between the LTTE and the SL Army. We didn’t know what to do. The familiar sense of fear consumed us. We jumped out of the vehicle, rolled onto the floor, and somehow crawled away. To this day I’m not sure how we escaped.
After this incident, I didn’t feel safe working in Mattakalappu but my request to transfer to Colombo was also denied. So I quit that job and joined a company called Inoa tech where I was a structured cabling administrator. Working in Colombo, I was no longer immediately exposed to the impacts of the violence. But I knew I was never going to be truly free.
The discrimination I had to face when I lived back home prevented me from reaching many of my goals even though I was able to fluently speak all three languages of the country. We Tamils were expected to lead a life of perfection, any less would lead to ridicule, loss of opportunities, or even threat to life. Because I am Tamil I was always blamed for others’ wrongdoings. Because I was Tamil I was stopped and carded everywhere I went. Any real or perceived mistake I may have made was pointed out because of my Tamilness. The only reason I know I’m alive is because I was born in Colombo and speak Sinhala. MyfFriends on the other hand did not have that same privilege. They were forced into prisons and randomly beaten for the only crime of being born Tamil on Tamil lands.
The happiest and proudest thing I learned from my parents is determination. To me, my father was the embodiment of determination. No matter where he fell, he would rise again without letting his setbacks prevent him from reaching his larger goals. He rose to every occasion with vigor. He was an accountant, but in my eyes, he was a true fighter, for his children, for his family, and for his dreams. From my mother, I learned patience. She embodied the calmness, and resilience of water. Whether it was fear, doubt, disappointment, or despair she braved it with elegance. My mother and father gave us everything they could. Even after having gone through everything we have together, we did everything we could to create a happy family here in Canada. My parents laid the stepping stones for us to be able to lead the lives that we chose. So today, even as I live in the diaspora, I carry parts of my mother and father. I carry them literally in my name Siva Jeyanthan (Siva for Sivaram and Jeyanthan for Jeyamani), and I carry them in the way that I choose to raise my daughter with a strong sense of Tamilness which carries all the stories of resilience, and determination that leads us to be where we are today.”
1983 July 83 அன்று
அப்பொழுது எனக்கு வயது ஒன்பது. கல்விகற்ற கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் பரீட்சைக்கான நாள். காலையில் எழுந்து பரீட்சைக்கான எனது தயார்ப்படுத்தல்களை முடித்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லத்தயாரானேன். அன்று நடக்கவிருக்கும் கொடுமைகளைக் காணப்போகிறேன் என்றோ, அல்லது அந்தக் கொடுமைகளின் தாக்கம் பல தசாப்தங்களைக் கடந்தும் அவன் இதுவரை கண்டுவந்த வண்ணக் கனவுகளைக் கிழித்தெறிந்து கொடிய கனவுகளை இனித் தரும் என நான் நினைத்தே பார்த்ததில்லை. முந்தய ஓரிரு நாட்களாகவே அப்பாவும் அம்மாவும் ஏதோ பதற்றத்தோடே இருந்தார்கள். அவர்களுக்கு நடக்க இருக்கும் துயர நிகழ்வுகளின் கோரம் பற்றி முழுமையாகத் தெரியாவிட்டாலும் கூட ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என எண்ணிப் பயந்திருந்தனர். எனினும் அதை எமக்கு ஏனோ தெரிவிக்கவில்லை. வெள்ளை மேற்சட்டையும், நீல அரைக்காற்சட்டையும் Northstar shoes ம் போட்டு உற்சாகத்தோடு சகோதரியுடன் புறப்பட்ட எம்மிடம் அம்மா கூறினார் “எக்ஸாம் முடிஞ்ச உடனே இரண்டுபேரும் நேரா வீட்டை வரவேண்டும்”அம்மாவின் வேண்டுகோளில் என்றுமில்லாத சிறு கண்டிப்பும் இருந்தது.
அன்று காணப்போகும் அசம்பாவிதங்கள் ஏதும் அறியா ஒன்பது வயதுப் பாலகனாய் கொழும்பு இந்துக்கல்லூரியில் பரீட்சை எழுத தன் சகோதரியுடன் ஆர்வத்துடன் செல்கிறான் அச்சிறுவன்.
சகோதரி காலிவீதி, லோரன்ஸ் வீதி சந்தியில்விட்டதும் வீதிவழியே பாடசாலையை அடைவதும் மாலையில் பாடசாலை முடிந்ததும் மீண்டும் காலிவீதியில் உள்ள அச்சிறுவனின் தந்தையின் ஊராரின் சைவ சாப்பாட்டுக் கடை (பெயர் மறந்துவிட்டது) வந்து நிற்க அவனின் சகோதரி அழைத்துச்செல்வது தான் வழக்கம்.
அன்று பாடசாலை சென்றவனுக்கோ பேரதிர்ச்சி. பரீட்சைகள் அனைத்தும் இரத்தானதாகவும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதால் மறு அறிவித்தல் வரை பாடசாலை மூடப்படுவதாகவும் அனைவரையும் பாதுகாப்பாக வீடு செல்லுமாறும் அதிபர் சங்கரலிங்கம் ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றார்.
இவனுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் ஒரே குழப்பம் இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோசம் “ஐ எக்ஸாம் இல்லை ஸ்கூல் இல்லை” நிகழ இருக்கும் விபரீதத்தை உணராத பருவம் அது.
உதைபந்தை எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு இறங்கவும், உப அதிபர் பற்குணம் மாஸ்டர் வந்து கடுமையான தொனியில் சொல்லும் போதுதான், ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று அவனுக்குள் உறுத்திற்று.
இங்கிருந்து செல்லவேண்டும் ஆனால் எங்கே எதுவுமே தோன்றவில்லை. வழமையாக நிற்கும் சைவக்கடையில் நிற்போம் அக்காவந்ததும் வீட்டை போகலாம் என எண்ணியவாறு லோரன்ஸ் வீதிவழியே காலி வீதி நோக்கி நடக்கிறான் ஏனைய சக மாணவர்களோடு.
மோட்டார்சைக்கிளில் வந்த அங்கிள் “தம்பியவை தமிழே?? Hindu collage ஆ?? தனது மகனின் பெயரை சொல்லி தெரியுமே?? என்று கேட்டார் தெரியாது என்று தலையசைத்தான் அவன்.
பதற்றம் நிறைந்த அவர் கண்களில் ஒருகணம் தந்தையின் கண்டிப்பு தோன்றி மறைந்தது “எங்க சுத்துறீயாள்…கெதியா வீட்டை போங்கோ ஓடுங்கோ” கறுத்தகாற்சட்டையும் வெள்ளை சேட்டும் போட்ட முகம் தெரியாத ஒரு அங்கிள் சொல்லவும் நிலைமையின் மோசத்தை ஓரளவேனும் உணர்ந்தவனின் நடை வேகம் எடுத்தது.
சைவக்கடையினை அடைந்ததும் அங்கே எல்லோரது முகத்திலும் இனம் புரியாத பயத்தையும் பதற்றத்தையும் கண்டான். அது அவனுள் இருந்த அச்சத்தை அதிகரித்தது.
எப்போதுமே இன் முகத்துடன் வரவேற்கும் சைவகடையின் முதலாளி “ஏன் அப்பு இங்கை வந்தனியால்?? தனியவே?? ஓடுங்கோ வீட்டை ஓடிப்போங்கோ” மிகுந்த பதற்றத்துடன் சொல்லி முடிக்கவும் காடையர் கூட்டம் உள்ளே வந்து கடையை நொறுக்கி உள்ளே இருந்தவர்கள் மீதும் உடைமைகள்மீதும் மூர்க்கமாகவும் கண்மூடித்தனமாகவும் தாக்கினர்.
உறைந்து போய் நின்ற அச்சிறுவனின் கையைப் பிடித்து இழுத்தபடி ஓடிய முதலாளி பின்வாசல் வழியே வெளியேறி எப்படியாவது தப்பிப்போ என கலங்கிய விழிகளோடு பார்த்தார். என்ன நடக்கிறது… ஏன் நடக்கிறது… எங்கே போவது… அக்கா வந்தால் தேடுவாளே.. எதுவுமே புரியவில்லை.
அடுத்து என்ன செய்யவேண்டும் எதுவுமே விளங்கவில்லை
மனித ஓலங்கள் ஒன்றை மட்டும் உணர்த்திற்று “ஓடு ஓடு” உள்ளுக்குள் ஏதோ ஒன்று சொல்ல ஓடினான்…
எத்தனை தடவை விழுந்தானோ தெரியாது கால்களின் சிராய்பின் எரிச்சல் கூட அவனுக்குத் தெரியவில்லை. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.
எந்த அங்கிள் கண்டிப்புடன் இவனைக் கடிந்தாரோ அவர் லோரன்ஸ் வீதியில் இரத்த வெள்ளத்தில் காடையர் மத்தியில் உயிர்ப்பிச்சை கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தார்… கூரிய ஆயுதங்களுடன் இருந்த அக்காடையர் முகம் கொடூரமாக இருந்தது
இவனுக்கு. திரைப்படங்களில் கூட வன்முறையை பார்க்கவிடாமல் காத்து வளர்த்த இவன் தந்தை கனவில் கூட எண்ணிஇருக்கமாட்டார் ஒன்பது வயதில் வன்முறையின் உச்சத்தை நேரடியாகக் காண்பான் என்று. அங்கிள் தப்புவாரா?? ஏன் கொல்லவருகிறார்கள்?? அங்கிள் தேடிவந்த அவர் மகன் எங்கே?? எதையுமே ஆராயும் நிலையில் இவன் இல்லை.
ஓடிச்சென்று காலி வீதியில் தெற்கே செல்லும் எதோ ஒரு பேருந்தில் ஏறுகிறான். “கொய்த யன்னே?? “(எங்கே போகிறாய்??) நடத்துனர் வினவ “க.. க.. கல்கிஸ்ஸ”
“டிக்கெட் கண்ட ” எதையும் கிரகிக்க முடியவில்லை கண்ணீரைத்தவிர…
அந்த ஒன்பது வயதில் வன்முறையின் உச்சத்தில், எதையெல்லாம் பார்க்கக்கூடாதோ, அதையெல்லாம் தெருவெங்கும் அச்சத்தில் உறைந்த கண்களோடு பார்த்தபடியே பேருந்து அசைய மறுத்து அசைந்தது.
எங்குமே மரண ஓலம். காப்பாத்துங்கோ… ஐயோ… அம்மா… என்னை விடுங்கோ… ஆஆ ஐயோ.. வாள்வெட்டுக்கள், கொலைவெறியோடு தாக்கும் மனிதமிருகங்கள், டயர் போட்டு எரித்த குற்றுயிர் உடல்கள், வீடுகள், உடைமைகள், நடுவீதியில் குற்றுயிராய் தண்ணீர்தங்கோ என்று கத்தவும் திராணி அற்று அனுங்கி அடங்கிய பொட்டுவைத்த அப்பெண்ணுயிர், சுவாலைவிட்டு எரியும் பெரு நெருப்பு எரியும் நெருப்பில் வெடித்துப்பறக்கும் ஏதேதோ, கரும்புகை மண்டலம் இரத்தவாடை கண்களில் ஆறாய் ஓடிய நீர் அச்சம் எரிச்சல் கூவி அழவும் முடியாமல் தொண்டை அடைத்துப்போய் இருந்தது.
மூன்று மொழி தெரிந்தும் “அம்மா” ஒற்றைச்சொல்லே அவன் விம்மல்களின் இடையே ஒலித்தது.
அம்மாவிடம் போகவேண்டும் இது ஒன்றே அவன் இலக்காய் இருந்தது.
கல்கிஸ்ஸ அவன் இறங்கவேண்டிய இடம். இறங்க இரத்தம் உறைவது போல் உணர்ந்தான். தனியே எங்குமே செல்லாதவனின் முதல் தனிப்பயணம் இவ்வளவு கொடூரமாகவா இருக்க வேண்டும்??
புகைமண்டலம், எரியும் குற்றுயிர் உடல்கள் சீறும் வாகனங்களினூடே காலி வீதியைக் கடக்கவேண்டும். எப்போதுமே பெரியவர்களின் கையை பிடித்தவாறே பாதையை கடந்து பழகிய அவனுக்கு இது பெரும் சவாலாகவே இருந்தது. அப்போது அவன் கண்ணில் பக்கத்துவீட்டு சிங்கள அங்கிள் கண்ணில்பட்டார்.
ஓடிச்சென்று கையைப்பற்றினான் கையில் மண்ணெண்ணெய் கொள்கலனும் மறுகையில் பொல்லுடனும் நின்றார். இவன் அச்சத்தின் உச்சிக்கே போய்விட்டான். கல்கிஸ்ஸவில் இருந்த தமிழரின் வாழைப்பழ கடை சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தது…
அங்கிளின் கையை உதறிவிட்டு காலிவீதியை கடக்க ஓடுகிறான். “பொடிப்புத்தா ( அவ்வாறே அவர் அவனை அழைப்பார்) துவன்டேப்பா” (சிறு மகனே ஓட வேண்டாம்). கணத்தில் சீறிவந்த வாகனத்தில் மோத இருந்ததை ஒரு முரட்டுக்கரம் காப்பாற்றியது.
ஆம் அந்த பக்கத்துவீட்டு சிங்கள அங்கிள்தான். “ஓமத பார பணின்னே ” “இன்ட மம எக்கங் யன்னணங்” ( இவ்வாறா பாதையைக் கடப்பது ?? பொறுங்கோ நான் கூட்டிக்கொண்டு போறேன்). கூறியவர் இம்முறை இறுக பிடித்து அழைத்துச் சென்றார். உதறவும் முடியாமல் விருப்பமும் இல்லாமல் அழுதபடி தொடர்ந்தான்.
“கரம்” விளையாட்டு கற்றுக்கொடுத்த கரத்தில் மண்ணெண்ணெய் கொள்கலன். ஜம்பு அம்பரல்லா பறித்து பரிமாறிய குழந்தை போல பழகிய அங்கிளா இப்படி கொலை வெறியுடன்.. எண்ணியவாறே நடக்கிறான்.
அச்சிறுவனை காலிவீதியை கடந்ததும், அச்சிறுவனை விட்டுவிட்டு தன் கடமையை(?) செய்யப் புறப்பட்டுவிட்டார். விரைந்து சென்று வீட்டை அடைந்ததும் தாயின் மடியில் விழுந்து அழுதான் அழுதான் அழுதுகொண்டே இருந்தான்..
வழமையாக தேற்றும் அன்னை தேறவில்லை. அவள் கரம் மட்டும் தலை கோதியபடி இருந்தது. அவள் முகத்தில் வழமையான சாந்தம் தென்படவில்லை.
மாறாக இறுக்கமே பிரதிபலித்தது.
ஒருவேளை அழுது தீர்க்கட்டும் என எண்ணியிருக்கலாம் அல்லது எவ்வாறு ஆறுதல் சொல்வது எனத்தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது ஆருயிர்க் கணவனையும் ஆசை மகளையும் காணாத ஏக்கமாய் இருக்கலாம். பல கேள்விகள் பிஞ்சு நெஞ்சில் எதற்குமே விடையில்லை அவ் அன்னையிடம்.
அவனின் வீட்டில் மேலும் இருவர் வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்தனர். ஒருவர் அச்சிறுவனின் ஒன்றுவிட்ட அண்ணா மற்றயவர் தந்தையின் உறவினரின் மகன் இருவருமே சிங்களம்பேசாத இளைஞர்கள்.
இவனது வீட்டிற்கு காடையர் வந்தால் முதலில் பலியாகப்போவது இவ்விருவருமே. இது அச்சிறுவனுக்கும் புரிந்திருந்தது
அவ்விளைஞர்களுக்கும் புரியாமல் இல்லை. ஆன்டி பயமாய் இருக்கு. இதுவே தாரக மந்திரமானது.
பிற்பகல் 5 மணியை அடித்து ஓய்ந்தது சுவர்க்கடிகாரம் எந்நேரமும் நாமும் தாக்கப்படலாம் அச்சிறுவன் மனதினுள் நினைத்துக்கொண்டான். நானும் ஒரு கத்தியை எடுத்து வைத்துக்கொள்வோமா ??
ஒன்பது வயதில் தற்பாதுகாப்பிற்கு ஆயுதம் தூக்க துணிந்தான். வாசல் கதவு தட்டுப்பட எல்லோரது முகமும் அச்சத்தால் வெளுறிப்போனது..
தட்டும் ஓசை பலமானது எங்கள் இதய ஓசை அதைவிடப் பலமானது… இரு இளைஞர்களும் அடுப்பங்கரையில் விறகு சேமிக்கும் பகுதியில் ஒருவரும் பாத்திரம் வைக்கும் பகுதியில் மற்றயவருமாய் ஒளிந்துகொள்ள “அம்மா திறவுங்கோ கதவை” அது அக்கா என சிறுவன் சொல்லுமுன்பே ஓடிச்சென்று கதவை திறந்து உள்ளே இழுத்தாள் அன்னை.
அக்காவின் கையைப் பிடித்தபடி அவள் தோழி. இருவரின் வெள்ளை உடை முழுவதும் குருதி.. அவன் அக்காவின் தோழி சிங்கள இனப்பெண்.. அவள் பயத்தில் உறைந்திருந்தாள்.பயந்ததுபோல் இருவருக்கும் காயங்கள் ஒன்றும் இல்லை என்பது சற்றே ஆறுதல் அடைந்த அன்னைக்கு இப்போது நான்கு பிள்ளைகளை காக்கவேண்டிய பொறுப்பு. என்ன செய்வது என்ற யோசனையில் விட்டத்தை நோக்கினாள்..
“அம்மா பசிக்கிறது” சிறுவனுக்கு தாயின் நிலைமை புரிந்தது.. எனினும் பசி கேட்க வைத்தது. அதுவரை அமைதி காத்தவள் துள்ளி எழுந்து வேகமாக சமைத்தாள்.அன்னை சொன்னாள் விளக்குகளை ஒளிராமல் இருப்போம், வீட்டில் யாரும் இல்லை என நினைத்துவிடுவார்கள்.
“எங்களுக்கு உதவ யாருமே இல்லையா முருகா”அம்மா வேண்டினாள். பக்கத்து வீட்டில் இருந்த பாரீதா ஆன்டி அம்மாவோடு நல்ல பழக்கம். அவரிடம் உதவி கேட்கலாம் அக்கா யோசனை சொன்னாள்.
பரீதா ஆன்டியை பின்மதிலால் அழைக்கப்போக 3 வீடு தள்ளியிருந்த சேவியர் வீட்டில் அலறல் ஓலம் கேட்டது. தொடர்ந்து காடையர் வெறித்தாக்குதலால் வீடே எரிந்தது. அம்மா தீர்க்கமாக சொன்னாள்
அடுத்தது எம் வீடு வீட்டின் பின்னால் உள்ள மரவள்ளி தோட்டம், வெள்ளவாய்க்காலின் வழியே சென்றால் பக்கத்திலுள்ள விகாரையில் ஹாமதுருவிடம் தஞ்சம் புகலாம், அதற்குமேல் இறைவன் விட்ட வழி. இதற்குள் மேலும் இரு அயலவர்களது வீடுகள் தீக்கிரை ஆகின. பரீதாவை அழைத்து சொல்லிவிட்டு இருளில் ஐவரும் விகாரை நோக்கி நடந்தனர். எரியும் வீடுகளின் ஒளியே வழிகாட்டியது.விகாரைக்கு உள்ளும் காடையர் நடமாட்டம் இருந்தது. பெண்கள் தமிழில் அலறும் ஓசையும் கேட்டது.
இனி எங்கே போவது. எரியும் நெருப்பும் மரண ஓலமும் ஈரக்குலையை உலர வைத்தது. ஒரு டாச் விளக்கின் ஒளி வாய்க்காலின் மறுபுறத்தில் எம்மை தேடி அலைந்தது. வினாடிகள் நெருங்க அவ்வொளி அவர்களை நோக்கி வந்தது.
அச்சிறுவன் ஒழித்து வைத்திருந்த கத்தியை யாருக்கும் தெரியாமல் வெளியே எடுத்தான். ஒளி அவர்களை நோக்கி செலுத்தப்பட்டது. கூடவே ” ஓகொள்ளு மே த இன்னே ” ( நீங்கள் இங்கேயா இருக்குகின்றீர்கள்). எமது புதிய வீடு உரிமையாளர் ஒரு CID என்பது அப்பொழுது தான் புரிந்தது.
அவரின் பாதுகாப்பில் நாம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து ரத்மலானை விமான நிலையத்தில் உள்ள தமிழருக்கென அமைக்கப்பட்ட அகதி முகாமில் பல ஆயிரம் தமிழ் அகதிகளோடு அடைக்கப்பட்டோம்.
அப்பா இல்லாமலே எமது குடும்பம் கண்ணீரில் காத்திருக்க மாற்று உடைகள் கூட இல்லாமல் நாம் அகதிகளாக விமான நிலைய ஓடுபாதையில் அடைக்கப்பட்டோம். மூன்றாவது தடவையாக அந்நாளில் யாரோ ஒருவரால் மீண்டும் அச்சிறுவன் காப்பாற்றப்பட்டான்…
– Sivaram Sivajeyanthan, #MyTamilHeritage #MyHeritageMyStory